TNPSC Thervupettagam

மாலுமிகளின் தினம் - ஜூன் 25

June 27 , 2018 2284 days 1031 0
  • உலகப் பொருளாதார மற்றும் சமுதாயத்தில் மாலுமிகளின் பங்களிப்பிற்கு நன்றியினை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 அன்று உலகம் முழுவதும் மாலுமி தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
  • 2018ம் ஆண்டிற்கான கருத்துரு “மாலுமிகளின் நலன்”. இந்தக் கருத்துரு மாலுமிகளின் நலன், குறிப்பாக மனநலம் சார்ந்த பிரச்சினைகளை நினைவு கூறுகிறது.
  • சர்வதேச கடல்வழி அமைப்பானது 2010-ல் மாலுமிகள் தினத்தை நியமித்தது.

  • இந்த தினம் 2010 மணிலாவில் நடைபெற்ற தூதுவர்களின் மாநாட்டில் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதுடன் நிறுவப்பட்டது. இந்த மாநாடு மாலுமிகளுக்கு திருத்தப்பட்ட நிலையான பயிற்சி வழங்குதல், சான்றிதழ் அளித்தல் மற்றும் கண்காணித்தல் மாநாடு, 1978-ஐ ஏற்பதற்காக நடைபெற்றதாகும்.
  • இந்த தினம் முதன் முதலாக 2011-ல் உற்று நோக்கப்பட்டது. அதன் பின் ஒவ்வோர் ஆண்டும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகளின் கடைபிடிப்புப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்