TNPSC Thervupettagam

மாளவியா திட்டம்

September 9 , 2023 317 days 281 0
  • மத்தியக் கல்வித் துறை,  திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாளவியா திட்டம் எனப்படும் ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை தொடங்கியுள்ளார்.
  • இத்திட்டத்தின் மூலம் ஆசிரியர்களுக்குத் தகுந்தப் பயிற்சிகளை வழங்கப்பட உள்ளது.
  • உயர்கல்வி நிறுவனங்களில் (HEI) பணிபுரியும் ஆசிரிய உறுப்பினர்களின் திறனை மேம்படுத்துவதன் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
  • இது இந்தியா முழுவதும் நிறுவப்பட உள்ள 111 மாளவியா திட்ட மையங்கள் மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் 15 லட்சம் ஆசிரியர்களின் தொழில்முறை மேம்பாட்டை உறுதிப்படுத்தச் செய்வதோடு, அவர்களின் திறன்களை மேம்படுத்தவும் உதவுகிறது.
  • இது ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துதல், ஆசிரியர்களிடம் தலைமைத்துவ திறன்களை உருவாக்குதல் மற்றும் தேசியக் கல்விக் கொள்கையின் இலக்குகளை எட்ட உதவுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்