TNPSC Thervupettagam

மாவட்ட அளவிலான பருவநிலை இடர் மதிப்பீடு

January 6 , 2025 10 days 124 0
  • கௌஹாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், மண்டியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் (CSTEP) ஆனது, “இந்தியாவின் மாவட்ட அளவிலான பருவநிலை இடர் மதிப்பீடு: IPCC கட்டமைப்பைப் பயன்படுத்தி வெள்ளம் மற்றும் வறட்சி சார் இடர்களை வரைபடமாக்குதல்” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 51 மாவட்டங்கள் ‘மிக அதிக அளவிலான வெள்ள அபாயம் உள்ள பகுதிகள்’ பிரிவிலும், மேலும் 118 மாவட்டங்கள் ‘மிக அதிக வெள்ள அபாயம் உள்ள பகுதிகள்’ பிரிவிலும் அடங்கும்.
  • இவை முதன்மையாக அசாம், பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், குஜராத், ஒடிசா மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ளன.
  • 91 மாவட்டங்கள் ‘மிக அதிக அளவிலான வறட்சி அபாயம் உள்ள பகுதிகள்’ பிரிவிலும், 188 மாவட்டங்கள் ‘அதிக வறட்சி அபாயம் உள்ள பகுதிகள்’ பிரிவிலும் அடங்கும்.
  • இவை முதன்மையாக பீகார், அசாம், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளன.
  • 11 மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் வறட்சி ஆகிய இரண்டு பிரிவிலும் ‘மிக அதிக அளவிலான பாதிப்பு உள்ள பகுதிகள்’ என்ற பிரிவிலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்