- உலகளாவிய தொற்றுநோயான புதிய வகை கொரானா வைரஸ் நோய்க்கான (COVID-19) பதிலடி மற்றும் ஆயத்த நிலையை ஏற்படுத்தவும் அந்நோயை எதிர்க்கவும் மாநில அரசுகள் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார்.
- சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் 2015 எனும் சட்டத்தின் கீழ் மாவட்ட கனிம அறக்கட்டளைகள் நிறுவப் பட்டன.
- ஒவ்வொரு சுரங்க உரிமையாளரும் இந்நிதிக்கு தங்கள் லாபத் தொகையில் 10% அளவிற்குப் பங்களிக்க வேண்டும் என்று இந்தச் சட்டம் கூறுகிறது.
- இது சுரங்கத் தொடர்பான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நலனுக்காகப் பணியாற்றும் இலாப நோக்கற்ற அறக்கட்டளைகள் ஆகும்.
- சுரங்கப் பணிகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இது அமைக்கப் பட்டுள்ளது.
- இதன் செயல்பாட்டு முறையானது அந்த அறக்கட்டளை தொடர்புடைய மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் வருகிறது.
- இந்த நிதி மாவட்ட அளவில் சேகரிக்கப்படுகிறது.
பிரதான் மந்திரி கானிஜ் சேத்ரா கல்யாண் யோஜனா
- மாவட்ட கனிம அறக்கட்டளைகளால் உருவாக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி சுரங்கம் தொடர்பான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக இந்த திட்டம் பயன்படுத்தப் படுகிறது.
- பின்வரும் விவகாரங்களுக்கு "அதிக முன்னுரிமை" கொடுத்து இந்த நிதி பயன்படுத்தப்படும்.
- குடிநீர்
- உடல்நலம்
- பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்
- கல்வி
- வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாடு
- வயதான மற்றும் ஊனமுற்றோரின் நலன்
- துப்புரவு