மாவோயிஸ்ட் பகுதியான தான்டேவாடாவிற்கு முதல் விரைவு இரயில்
November 22 , 2017 2587 days 886 0
விசாகப்பட்டினம் – ஜக்தல்பூர் ஆகியவற்றுக்கிடையேயான சிறப்பு இரயிலை சத்தீஸ்கர் மாநிலத்தின் தான்டேவாடா மாவட்டத்திலுள்ள கிரன்டுல் வரை இந்திய ரயில்வே நீட்டித்துள்ளது.
இந்த விசாகப்பட்டினம் – ஜக்தல்பூர் சிறப்பு இரயில் வண்டி சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் பகுதியான தான்டேவாடா மாவட்டத்திற்கு முதன்முறையாக ஆரவாரத்துடன் செல்லவிருக்கிறது.
இடதுசாரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியான கிரன்டுலுக்கு சிறப்பு விரைவு வசதியிலான இரயில் சேவை ஏற்படுத்தப்படுவது இதுவே முதன் முறையாகும்.