120 நாடுகளைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தனியார் துறை பிரதிநிதிகள் கலந்துகொண்ட முதல் WHO உலக அமைச்சர்கள் மாநாடு மாஸ்கோவில் நடைபெற்றது.
இந்த மாநாட்டின் போது “மாஸ்கோ பிரகடனம்” ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்தியா இந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளது.
HIV துணையுடைய தொற்றுகளால் உண்டாகும் கூடுதல் இறப்புகளை நீக்குதல், தொற்று அல்லா நோய்கள் மற்றும் காசநோய்க்கு எதிரான ஒருங்கிணைப்புடைய செயலில் ஒத்திசைவை உண்டாக்குதல் போன்றவற்றிற்கு இந்த பிரகடனம் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கின்றது.
2035-ல் காசநோயை ஒழிப்பதற்கான பல்துறை பொறுப்புடைமையை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் , காச நோயை அழிப்பதற்கான உலகளாவிய இலக்கு மற்றும் (MDR-TB) பல வகை மருந்து எதிர்ப்பு காசநோயை (Multi-drug resistant TB) ஓர் தேசியப் பொது சுகாதாரப் பிரச்சனையாக கையாளுதல் போன்றவற்றினை இந்த பிரகடனம் வலியுறுத்துகிறது.