மாஸ்டர்கார்டு நிறுவனத்திற்குக் கட்டுப்பாடு – இந்திய ரிசர்வ் வங்கி
July 19 , 2021 1227 days 504 0
இந்திய ரிசர்வ் வங்கியினால் 2021 ஆம் ஆண்டு ஜூலை 22 முதல் மாஸ்டர்கார்டு ஆசியா / பசிபிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது புதிய உள்நாட்டு வாடிக்கையாளர்களை அதில் இணைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர்கார்டு நிறுவனத்திற்குப் பணம் பெறுதல், பண உள்ளீட்டு (அ) முன்கட்டண அட்டைகள் ஆகிய நடவடிக்கைகள் எதுவாகினும் அதற்கான புதிய வாடிக்கையாளர்களை தனது பிணையத்தில் இணைக்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
பணவழங்கீட்டு முறையின் தகவல் சேமிப்பு குறித்த சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறியதன் காரணமாக இந்த நிறுவனத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கப் பட்டு உள்ளது.