TNPSC Thervupettagam

மாஸ்டர்கார்டு பெண் தொழில்முனைவோர்கள் குறியீடு

March 15 , 2018 2317 days 764 0
  • அண்மையில் வெளியிடப்பட்ட மாஸ்டர்கார்டு பெண் தொழில்முனைவோர்கள் குறியீட்டின் இரண்டாவது பதிப்பில், 57 நாடுகளுள் இந்தியா 52வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • வங்கதேசம், எகிப்து, அல்ஜீரியா, சவூதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகளை முந்திய நிலையில் மட்டுமே இந்தியா உள்ளது.
  • தரவரிசையில் எத்தகு மாற்றமும் பெறாமல் கடந்தாண்டைப் போலவே இவ்வாண்டும் இந்தியா 52வது இடத்தில் உள்ளது.

  • இந்த அறிக்கைப்படி, கலாச்சாரச் சார்புகளின் (Cultural Bias) காரணமாக இந்திய பெண் வணிக உரிமையாளர்கள், தலைவர்கள் மற்றும் தொழில்முறை வல்லுநர்கள் வணிக உரிமையாளர் முறையை (business ownership) நோக்கி குறைந்த அளவு விருப்பத்தையே வெளிப்படுத்துகின்றனர்.

  • பல்வேறு வணிக ஆதரவு நிலைகளின் (supporting conditions) மூலம் தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை தங்களுடைய உள்ளூர் வணிக சூழலுக்குள் பெருக்கிக் கொள்வதற்கு பெண் தொழில்முனைவோர்களுக்கு உள்ள திறனை அளவிடும் குறியீடே மாஸ்டர்கார்டு குறியீடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்