TNPSC Thervupettagam

மிக உயரமான இடத்தில் அமைந்த உலகின் முதல் போர் விமான தளம்

September 16 , 2023 310 days 214 0
  • எல்லைச் சாலைகள் அமைப்பு ஆனது, லடாக்கில் உள்ள நியோமா என்ற கிராமத்தில் மிக உயரமான இடத்தில் அமைந்த இந்தியாவின் முதல் போர் விமான தளத்தினை அமைக்க உள்ளது.
  • நியோமா கிராமம் ஆனது சுமார் 13,700 அடி உயரத்தில் பாங்கோங் சோ நதியின் தெற்குக் கரைக்கு அருகில் அமைந்துள்ளது.
  • நியோமா சீனாவுடனான மெய் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியிலிருந்து 46 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
  • நியோமா விமான நிலையப் பணிகள் மட்டுமல்லாது, ஷிங்குன் லா சுரங்கப் பாதையின் கட்டுமானப் பணிகளையும் எல்லைச் சாலைகள் அமைப்பு விரைவில் தொடங்க உள்ளது.
  • இது 15,855 அடி உயரத்தில் அமைந்த உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த சுரங்கப் பாதையாக இருக்கும்.
  • இந்தச் சுரங்கப் பாதையானது இமாச்சலில் உள்ள லாஹவுல்-ஸ்பிதி பகுதியை லடாக்கின் ஜாஸ்கர் பள்ளத்தாக்குப் பகுதியுடன் இணைக்கச் செய்வதோடு அனைத்து வானிலைகளிலும் போக்குவரத்து சேவையினை வழங்கும் வகையில் இது அமைக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்