நாக்பூர் நகர மெட்ரோ நிர்வாகமானது 3,140 மீட்டர் நீளமான இரட்டை அடுக்கு மேம்பாலத்தினை (மெட்ரோ) கட்டமைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
வார்தா சாலையில் 3.14 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த இரட்டை அடுக்கு மேம்பாலத்தின் வழியில் சத்ரபதி நகர், ஜெய் பிரகாஷ் நகர் மற்றும் உஜ்வல் நகர் ஆகிய மூன்று மெட்ரோ நிலையங்கள் அமைந்துள்ளன.
இந்தத் திட்டமானது ஏற்கனவே ஆசிய சாதனைப் புத்தகம் மற்றும் இந்தியா சாதனைப் புத்தகம் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது.