NGC 3785 அண்டத்துடன் தொடர்புடைய, இதுவரையில் கண்டறியப்படாத மிக நீளமான நட்சத்திர மற்றும் வாயு நீட்சியின் முடிவில் ஒரு புதிய அதிக பரவல் எல்லை கொண்ட அண்டம் உருவாகுவதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது பூமியிலிருந்து சுமார் 430 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் லியோ என்ற விண்மீன் திரளில் அமைந்துள்ளது.
இது NGC 3785 அண்டத்திலிருந்து 1.27 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிற்கு நீண்டு உள்ளது.
இது இந்த அண்டத்திற்கும் அதன் அண்டையில் உள்ள ஓர் அண்டத்திற்கும் இடையில் உள்ள ஈர்ப்பு விசை சார்ந்த தொடர்புகளின் விளைவினால் உருவானதாகும்.