மிகப்பெரிய அளவிலான வங்கிகள் ஒருங்கிணைப்புத் திட்டம்
March 31 , 2020 1704 days 591 0
இந்திய ரிசர்வ் வங்கியானது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து அரசிற்குச் சொந்தமான 10 வங்கிகளை 4 வங்கிகளாக ஒருங்கிணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த இருக்கின்றது.
மத்திய ரிசர்வ் வங்கிச் சட்டமானது பொது நலன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் திருத்தங்களை மேற்கொள்ள இந்திய அரசிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அதிகாரத்தின் மூலம், மத்திய நிதித் துறை அமைச்சர் இந்த ஒருங்கிணைப்புத் திட்டத்தை முன்மொழிவார். இந்தத் திட்டமானது மத்திய ரிசர்வ் வங்கியினால் ஒப்புதல் அளிக்கப்படும்.
இதுபற்றி
இந்தத் திட்டத்தின் படி, இந்திய யுனைடெட் வங்கி மற்றும் ஒரியண்டல் வணிக வங்கி ஆகியவை பஞ்சாப் தேசிய வங்கியுடன் இணைக்கப்பட இருக்கின்றது.
சிண்டிகேட் வங்கியானது கனரா வங்கியுடன் ஒருங்கிணைக்கப்பட இருக்கின்றது.
அலகாபாத் வங்கியானது இந்திய வங்கியுடன் ஒருங்கிணைக்கப்பட இருக்கின்றது.
மேலும், ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேசன் வங்கியானது இந்திய யூனியன் வங்கியுடன் இணைக்கப்பட இருக்கின்றது.