அறிவியல் அருங்காட்சியகங்களுக்கான தேசிய குழு (The National Council of Science Museums - NCSM) கூகுள் கலை மற்றும் கலாச்சார மையத்துடன் ஒருங்கிணைந்து ஒரு ஊடாடும் வகையிலான நிகழ்நேரக் கண்காட்சியை “Once Upon a Try : Epic Journey of invention and discovery” எனும் தலைப்பில் (ஒரு காலத்தில் ஒரு முயற்சி : கண்டு பிடிப்புகள் மற்றும் அறிமுகங்களின் காவியப் பயணம்) வெளியிட்டது.
இந்தக் கண்காட்சி ஏறக்குறைய 400 ஊடாடும் கதைகளின் வாயிலாக உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் மற்றும் அறிமுகங்களையும் அந்த கண்டுபிடிப்புகளின் பின்புலங்களையும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மனிதனின் மிகப்பெரிய சாதனைகளையும் காட்சிப்படுத்துகின்றது.
பின்வரும் தலைப்புகளில் இந்தியாவை மையமாகக் கொண்ட 6 கதைகளை அறிவியல் அருங்காட்சியங்களுக்கான தேசிய குழு கொடுத்து இருக்கின்றது. அவையாவன
வரலாற்றுத் துவக்கங்கள்
ஆயுர்வேதா
சுஸ்ருத சம்ஹிதா
ராசசாலா
இலக்கியம் மற்றும்
துணைக் கண்டத்தின் இசைக் கருவிகள்
அறிவியல் அருங்காட்சியகங்களுக்கான தேசிய குழு என்பது இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பாகும்.