கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயானது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப் பட்டவற்றுள் "மிகப் பெரியதாக" அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த காட்டுத் தீயானது 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்பட்ட மிகப் பெரியக் காட்டுத் தீயாகும்.
ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று தொடங்கிய இந்தக் காட்டுத் தீயானது, சுமார் 310 சதுர மைல்களுக்கும் அதிகமான (810 சதுர கிமீ) பகுதிகளைத் தீக்கிரையாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட இந்தப் பகுதியானது நியூயார்க் நகரின் அளவை விடப் பெரியது.