பி.எல். லேசர்டே எனப்படும் ஒரு மிகப்பெரிய கருந்துளை அல்லது சிற்றலை என்ற விண்மீனிலிருந்து (Black hole or blazar) வெளிப்படும் வலுவான சுடரொளிகளுள் ஒன்றை இந்திய வானியலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
ஒளியின் வேகத்தில் பயணிக்கும் இவை மின்னேற்றத் துகள்களின் குவியலை வெளியிடுகின்றன.
இது பிரபஞ்சத்தின் மிகவும் ஒளிரும் மற்றும் ஆற்றல் மிக்க பொருட்களில் ஒன்றாகும்.
இந்தச் சுடரொளியின் பகுப்பாய்வு கருந்துளையின் நிறை மற்றும் அந்த உமிழ்வின் மூலத்தைக் கண்டறிய உதவும்.
இது பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களின் மர்மங்களை ஆராய்வதற்கும் நிகழ்வுகளைக் கண்டுபிடிப்பதற்கும் வழிவகை செய்யும்.
பி.எல். லேசர்டே பிளேஸர் (சிற்றலை விண்மீன்) ஆனது 10 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.