TNPSC Thervupettagam

மிகப்பெரிய பெரும் பசுமைச் சுவர் முன்னெடுப்பு

January 23 , 2021 1407 days 636 0
  • சமீபத்தில் சஹேல் மற்றும் சகாராவிற்கான பெரும் பசுமைச் சுவர் முன்னெடுப்பானது பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான ஒரு கோள் மாநாட்டில் 14 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியைப் பெற்றுள்ளது.
  • இது 8000 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 15 கிலோ மீட்டர் அகலம் கொண்ட அளவில் மரங்கள், தாவரத் திரள், புல்வெளிகள் மற்றும் தாவரங்களை வளர்ப்பதன் மூலம் 100 மில்லியன் ஆப்பிரிக்கர்களின் வாழ்க்கையை மாற்றுவதை  நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது ஆப்பிரிக்காவின் தலைமையிலான ஒரு முன்னெடுப்பாகும்.
  • இது 17 ஐக்கிய நாடுகளின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளில் 15 இலக்குகளுக்குத் தனது பங்களிப்பைச் செலுத்த உள்ளது.
  • இந்த திட்டமானது 2030 ஆம் ஆண்டில் 100 மில்லியன் ஹெக்டேர் அளவிலான சீரழிந்த நிலத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பிற்காக சாட், புர்கினோ பசோ, எரித்திரியா, எத்தியோப்பியா, மாலி, நைஜர், மௌரிட்டானியா, நைஜீரியா, சூடான், செனகல், டிஜிபௌட்டி ஆகிய நாடுகள் இடையீட்டு மண்டலங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • 2030 ஆம் ஆண்டில் நிலச் சமநிலையை அடைவதே பாலைவனமயமாதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தின் முக்கியக் குறிக்கோளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்