Fortune India இதழானது 2021 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மிகவும் அதிகாரம் வாய்ந்த 50 பெண்மணிகளின் பட்டியலைச் சமீபத்தில் வெளியிட்டது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலிடத்திலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிதா அம்பானி இரண்டாம் இடத்திலும் இதில் உள்ளனர்.
Fortune India வெளியிட்ட இந்தப் பட்டியலில் உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியலாளர் சௌமியா சுவாமிநாதன் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கீதா கோபிநாத் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இப்பட்டியலில் இடம்பெற்ற மற்றப் பெண்மணிகள் டெசி தாமஸ், சுசித்தா எலா, கிரண் மசூம்தார் ஷா, ரெட்டி சகோதரிகள் மற்றும் ஈஷா அம்பானி ஆகியோர் ஆவர்.