மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பறவை இனம்
October 6 , 2024
48 days
152
- காசோவரி (தீக்கோழிகள்) பறவைகள் ஆனது வடக்கு ஆஸ்திரேலியா, நியூ கினியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளில் காணப்படுகின்றன.
- அதிகரித்துள்ள வேட்டையாடுதல் மற்றும் விரைவான வாழ்விட இழப்பு ஆகியவற்றால் இந்த இனம் தற்போது அழியும் அபாயத்தில் உள்ளது.
- ஆஸ்திரேலியாவின் காடுகளில் சுமார் 5,000க்கும் குறைவான எண்ணிக்கையிலான பறவைகளே எஞ்சியுள்ளன.
- உலகிலேயே மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பறவையாக இது கருதப்படுகிறது.
- காசுவாரிடே குடும்பம் ஆனது, உயிருடன் காணப்படும் மூன்று காசோவரி இனங்களை – அதாவது காசுவேரியஸ் இனத்தினைச் சேர்ந்த அனைத்தையும் - உள்ளடக்கியதாகும்.
- மிகப்பெரிய காசுவேரியஸ் இனமானது ஆறு அடி உயரம் மற்றும் 160 பவுண்டுகள் வரை எடையுள்ளதாக இருக்கும்.
- இந்தப் பெரிய பறவைகளால் பறக்க முடியாது ஆனாலும் அவற்றின் மிகவும் சக்தி வாய்ந்த கால்களால் அவை அதிக வேகத்தில் (31m/Hr) ஓடக் கூடியவை.
- ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 26 ஆம் தேதியன்று உலக நெருப்புக்கோழிகள் தினம் அனுசரிக்கப் படுகிறது.
Post Views:
152