TNPSC Thervupettagam

மிகவும் ஆற்றல் வாய்ந்த காஸ்மிக் கதிர்கள்

December 10 , 2024 12 days 97 0
  • நமீபியா நாட்டில் உள்ள உயர் ஆற்றல் முப்பரிமாண அமைப்பு (HESS) ஆய்வகத்தின் அறிவியலாளர்கள், இது வரையில் கண்டுபிடிக்கப்பட்டதில் மிகவும் ஆற்றல் வாய்ந்த காஸ்மிக் (அண்டக்) கதிர்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • இவை பூமிக்கு மிக அருகில் உள்ள மர்மமான மூலங்களால் உற்பத்தி செய்யப் படுகின்றன.
  • இந்தக் கதிர்கள் 40 டெரா எலக்ட்ரான் வோல்ட் (TeV) வரையிலான சில ஆற்றல்களில் அல்லது புலப்படும் ஒளியின் 40,000 மடங்கு ஆற்றலைக் கொண்டுள்ளன.
  • காஸ்மிக் கதிர்கள் 1912 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் இயற்பியலாளர் விக்டர் ஹெஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்தக் கதிர்கள் ஆனது சூரியன், மீவொளிர் வீண்முகில்கள், வேகமாகச் சுழலும் துடிப் பண்டங்கள் மற்றும் பிற அறியப்படாத மூலங்களால் உற்பத்தி செய்யப்படும் உயர் ஆற்றல் துகள்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்