ரூர்க்கியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது தொழில்துறை புத்தாக்க விருதுகளுக்காக வேண்டி மதிப்பு மிக்க இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பினால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
இந்த நிறுவனமானது இந்த ஆண்டில், மிகவும் புத்தாக்கம் மிக்க ஆராய்ச்சி நிறுவனம் என்ற பிரிவின் கீழ் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு இந்த நிறுவனமானது அதன் கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு “ஆண்டின் சிறந்த புத்தாக்கம் மிக்க கல்வி நிறுவனம்” என்று அறிவிக்கப்பட்டது.