மிகவும் பெரிய நியூட்ரான் நட்சத்திரம் - J0740 + 6620
September 24 , 2019
1891 days
800
- தொலைதூர நட்சத்திர அமைப்பை ஆராயும் வானியலாளர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரம் எது என்பதை அடையாளம் கண்டுள்ளனர்.
- புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட J0740 + 6620 போன்ற நியூட்ரான் நட்சத்திரங்கள் இறந்த நட்சத்திரங்களின் மீதமுள்ளவைகளாகும்.
- நட்சத்திரங்கள் மில்லியன் அல்லது பில்லியன் ஆண்டுகளாக இருக்கின்றன. ஆனால் அவை இறுதியில் எரிசக்தி இல்லாமல் போய் விடுகின்றன.
- பின்னர் அவை பின்வரும் மூன்றில் ஒன்றாக மாறுகின்றன.
- சிறிய நட்சத்திரங்கள் வெள்ளை நிறம் கொண்ட குள்ளக் கோள்களாக (சூரியனைப் போல) மாறுகின்றன.
- பெரிய நட்சத்திரங்கள் கருந்துளைகளில் கலந்து விடுகின்றன.
- 8 மற்றும் 29 என்ற சூரிய நிறைகளுக்குச் சமமான நிறைகளைக் கொண்ட நட்சத்திரங்கள் நியூட்ரான் நட்சத்திரங்களாகின்றன.
J0740 + 6620 பற்றி
- MSP J0740 + 6620 ஆனது சூரியனை விட 2.14 மடங்கு பெரியது ஆகும்.
- ஆனால் இதன் விட்டம் 15 மைல்களுக்கும் குறைவானது ஆகும்.
- "ஷாபிரோ நேர தாமதம்" என்ற கொள்கையைப் பயன்படுத்தி இதன் நிறை தீர்மானிக்கப் படுகின்றது.
- MSP J0740 + 6620இன் தீவிர அடர்த்தி காரணமாக அது விரைவில் கருந்துளைக்குள் விழக்கூடும்.
Post Views:
800