இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 2021 ஆம் ஆண்டில் தொடர்ந்து 5வது முறையாக அதிக மதிப்பு மிக்க பிரபலமாகத் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளார்.
டஃப் & ஃபெல்ப்ஸ் (இப்போது க்ரோல்) என்ற நிறுவனத்தினால் "டிஜிட்டல் முடுக்கம் 2.0" என்றஒரு தலைப்பில் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான பிரபல தர மதிப்பீட்டு அறிக்கையில் (7வது பதிப்பு) இந்தத் தகவலானது கூறப்பட்டுள்ளது.
ஆலியா பட் இப்பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதோடு மேலும் மிகவும் மதிப்பு மிக்க பெண் பிரபலமாகவும் இவர் மாறியுள்ளார்.
இவர் முதல் 10 இடங்களில் உள்ள இளையப் பிரபலமும் பெண் பாலிவுட் நடிகர்களில் மிகவும் மதிப்பு மிக்க நடிகையும் ஆவார்.