ராஜஸ்தானின் ஜோத்பூர் விமானத் தளத்தில் மிக் - 27 (மைக்கோயன் மிக் -27) ரகப் போர் விமானமானது (கடைசி விமானம்) இந்திய விமானப் படையிலிருந்து விலக்கப் பட்டது.
இந்த விமானமானது கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய விமானப் படையில் பணியாற்றியது.
இந்த விமானமானது 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போரின் போது பயன்படுத்தப்பட்டது.
இது இந்தியாவில் ‘பகதூர்’ என்ற பெயரில் அறியப் படுகின்றது.
2001/02 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான விவகாரமான பராக்கிரமம் என்ற ராணுவ நடவடிக்கையிலும் இது பங்கேற்றது.
இது 1985 ஆம் ஆண்டில் இந்திய விமானப் படையில் அறிமுகப் படுத்தப் பட்டது.