இந்திய வானிலை ஆய்வு மையம் மிக்சாங் ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்கும் வரை ‘வெப்ப மண்டலப் புயலாக’ (காற்றின் வேகம் மணிக்கு 62 கி.மீ. முதல் 87 கி.மீ. வரை) இருக்கும் என்று ஆரம்பத்தில் கணித்திருந்தது.
ஆனால் பின்னர், அது ஒரு ‘தீவிர‘ புயலின் தீவிரத்தினைக் கொண்டிருக்கும் என்று கணித்தது (காற்றின் வேகம் மணிக்கு 88 கி.மீ. முதல் 166 கி.மீ. வரை).
இது பாபட்லா என்னுமிடத்திற்கு அருகில் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையைக் கடந்து சென்றது.
இப்பகுதி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு இடையே உள்ளது.
ஆந்திரக் கடற்கரையை கடந்த பிறகு, இந்த புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசாவை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் ஆனது அப்பகுதியில் ‘ஆரஞ்சு’ நிற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது
தட்பவெப்பவியல் ரீதியாக, வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலை உள்ளடக்கிய வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஐந்து புயல்கள் உருவாகின்றன.
இவற்றில் சராசரியாக நான்கு புயல்கள் வங்காள விரிகுடாவிலும், ஒன்று அரபிக் கடலிலும் உருவாகின்றன.