மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் மாநில தினம் - பிப்ரவரி 20
February 22 , 2020 1741 days 652 0
1987 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று, மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகியவை முறையே இந்திய ஒன்றியத்தின் 23 மற்றும் 24வது மாநிலங்களாக (புதிய 2 மாநிலங்கள்) உருவாகியுள்ளன.
மிசோரம்
வடகிழக்கு மறுசீரமைப்புச் சட்டம், 1972 ஆனது அமல்படுத்தப்பட்டதன் மூலம் மிசோரமானது ஒரு ஒன்றியப் பிரதேசமாக மாறியுள்ளது.
மிசோரம் மாநிலச் சட்டம், 1986 ஆல் மிசோரத்திற்கு மாநில உரிமை வழங்கப் பட்டுள்ளது.
தலைநகரம்: அய்ஸ்வால்
பாலின விகிதம்: 1000 ஆண்களுக்கு 975 பெண்கள் (தேசிய அளவு: 943/1000)
கல்வியறிவு: 91.58% (தேசிய அளவில்: 74.04%)
மிசோரம் மாநிலமானது தனது சர்வதேச எல்லையை மியான்மர் மற்றும் வங்க தேசத்துடன் பகிர்ந்து கொள்கின்றது.
இந்தியாவின் வனங்களின் நிலை குறித்த அறிக்கை - 2019ன் படி, மிசோரம் மாநிலமானது தனது மொத்தப் புவியியல் பரப்பளவில் 85.4 சதவீதம் என்ற அளவில் அதிகபட்ச வனப்பகுதியைக் கொண்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசம்
இந்தப் பகுதியானது 1972 ஆம் ஆண்டில் அருணாச்சலப் பிரதேசத்தின் ஒன்றியப் பிரதேசமாக மேம்படுத்தப்பட்டது.
அருணாச்சலப் பிரதேசத்திற்கு 1986 ஆம் ஆண்டின் அருணாச்சலப் பிரதேச மாநிலச் சட்டத்தினால் 1987 ஆம் ஆண்டில் மாநில உரிமை வழங்கப்பட்டது.
தலைநகரம்: இட்டாநகர்
பாலின விகிதம்: 1000 ஆண்களுக்கு 938 பெண்கள் (தேசிய அளவு: 943/1000)
கல்வியறிவு: 65.38% (தேசிய அளவில்: 74.04%)
அருணாச்சலப் பிரதேசமானது பூடான், சீனா மற்றும் மியான்மருடன் சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றது.
இது வடகிழக்கு பிராந்தியத்தில் மிகப் பெரிய மாநிலப் பகுதியாக விளங்குகின்றது. இது அசாம் மாநிலத்தை விடவும் பெரியதாக உள்ளது.