ஹரியானா அரசாங்கம் ஆனது பிவானி மாவட்டத்தில் 4,400 ஆண்டுகளுக்கும் மேலான ஹரப்பா நாகரிகத்தின் இரண்டு முக்கியத் தளங்களைப் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்களாக அறிவித்துள்ளது.
இந்த இரண்டுத் தளங்களும் திக்ரானா மற்றும் மிடதால் ஆகிய இரண்டு அண்டை கிராமங்களில் அமைந்துள்ளன.
திக்ரானா என்ற பகுதியில், கி.மு. 2,400 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் செம்புக் கற்கால வேளாண் சமூகங்கள் வசித்து வந்தன.
சோதியர்கள் என்று பிரபலமாக அறியப்படும் இந்த ஆரம்பகாலக் குடியேறிகள் சாங், மிடதால், திக்ரானா போன்ற இடங்களில் ஓலை கூரைகளைக் கொண்ட சிறிய மண் செங்கல் வீடுகளில் வசித்து வந்தனர்.
செம்பு, வெண்கலம் மற்றும் கல் கருவிகள் அதிக எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதால் அவர்கள் அவற்றை அதிகளவில் பயன்படுத்தினர் என அறியலாம்.