TNPSC Thervupettagam

மிட்ராக்ளிப்

March 21 , 2021 1404 days 755 0
  • இந்தியாவைச் சேர்ந்த அப்போலோ மருத்துவமனைகள் குழுமமானது ஆசியாவிலேயே முதல் முறையாக ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு மிட்ராக்ளிப் மருத்துவச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது.
  • இதன் மூலம் ஜப்பானில் ஒரு நாளில் மூன்று நோயாளிகளுக்கு மிட்ராக்ளிப் உள்வைப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட சாதனையை இது முறியடித்துள்ளது.
  • மிட்ராக்ளிப் மருத்துவ நடைமுறையில் பயன்படுத்தப்படும் குறைந்தபட்ச ஊடுருவும் சிகிச்சை முறை என்பது இதயத்தைத் திறந்து செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு அவசியமில்லாமல், கசியும் மிட்ரல் வால்வைச் சரி செய்ய உதவுகிறது.
  • அறுவை சிகிச்சையில் அபாயத்தைக் கொண்டுள்ள நோயாளிகளுக்கு வாழ்வு அளிக்கும் மருத்துவ நடைமுறையாகவும் இது அமைகிறது.
  • இதயச் செயலிழப்பு நோயாளிகளுக்கு மிட்ராக்ளிப் மருத்துவ நடைமுறையைச் செய்வதற்கு இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கீகாரம் பெற்ற ஒரு சில மருத்துவமனைகளில் அப்போலோ மருத்துவமனைகள் முன்னணியில் உள்ளன.
  • பல மருந்துகளால் எந்தவொரு முன்னேற்றமும் பெறாத இதயச் செயலிழப்பு நோயாளிகளுக்கு மிட்ராக்ளிப் மருத்துவ நடைமுறையானது ஒரு தரமான மருத்துவச் சிகிச்சை முறையாக மாறியிருக்கின்றது.
  • மித்ராக்ளிப் என்பது ஒரு புரட்சிகரமான மருத்துவ சாதனமாகும்.
  • இது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இதயச் செயலிழப்புக்கு வழிவகுக்கக் கூடிய மிட்ரல் வால்வு கசிவுகளைக் கொண்டு உள்ள நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை அல்லாத ஒரு மாற்று மருத்துவச் சிகிச்சை நடைமுறையை இது வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்