உலக ஈர நிலங்கள் தினத்தன்று (World Wetlands day) மிதக்கும் சுத்திகரிப்பு ஈர நிலம் ஒன்று (Floating Treatment Wetland-FTW) மாசடைந்த நீர்நிலையினை தூய்மைப்படுத்தி சுத்திகரிப்பதற்காக ஹைதராபாத்திலுள்ள நெக்னம்பூர் ஏரியில் அமைக்கப்பட்டுள்ளது.
ஏரி நீரிலுள்ள அதிகப்படியான நைட்ரேட் மற்றும் ஆக்ஸிஜன் மாசுபடுத்திகளை உறிஞ்சி நீரினை சுத்திகரிக்கவல்ல தாவரங்கள் இந்த சதுப்பு நிலங்களில் நடவு செய்யப்பட்டுள்ளன.
ஹைதராபாத் மாநகர மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரங்கா ரெட்டி மாட்ட நிர்வாகத்தின் முயற்சியால் இந்த மிதக்கும் சுத்திகரிப்பு ஈரநிலம் அமைக்கப்பட்டுள்ளது.
மண் பயன்பாடற்ற ஹைட்ரோபோனிக்ஸ் முறையின் அடிப்படையில் இந்த மிதக்கும் சுத்திகரிப்பு ஈரநிலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மிதக்கும் சதுப்பு நிலமானது நாட்டின் மிகப்பெரிய மிதவை சுத்திகரிப்பு சதுப்புநிலமாக இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வெட்டிவேர், செம்பருத்தி, சிட்ரோனெல்லா, துளசி, அஷ்வகந்தா, பூக்கும் மூலிகைகள் போன்ற பல்வேறு மாசுக்களை உறிஞ்சி ஏரியை தூய்மைப்படுத்தவல்ல தாவரங்கள் இந்த மிதக்கும் சதுப்பு நிலத்தில் நடவு செய்யப்பட்டுள்ளன.