TNPSC Thervupettagam

மிதக்கும் சூரிய ஆற்றல் ஆலைக்கான ஆய்வுக் குழு

July 2 , 2018 2210 days 628 0
  • மஹாராஷ்டிரா அரசானது சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள உஜானி அணையில் 1000 மெகாவாட் திறனுள்ள மிதக்கும் சூரிய ஆற்றல் ஆலையின் வளர்ச்சி தொடர்பான பிரச்சனைகளை ஆய்வு செய்ய ஆய்வுக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
  • இக்குழு மஹாராஷ்டிர மாநில மின்சார வழங்கல் நிறுவனத்தின் இயக்குநர் சதீஷ் சவான் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அணையின் நீர்மட்டத்தை மாதம் வாரியாக கண்காணித்தல் ஆகிய பல பணிகளை இக்குழு மேற்கொள்ளும்.
  • உஜானி மும்பையில் இருந்து 300 கி.மீ. தொலைவில் சோலாப்பூர் மாவட்டத்தின் மாதாத் தாலுகாவில் அமைந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் அணைகளில் பெரிய அணையாக இந்த அணை உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்