TNPSC Thervupettagam

மிதக்கும் சோலார் நிலையம்

December 4 , 2017 2419 days 801 0
  • இந்தியாவின் மிகப் பெரிய மிதக்கும் சோலார் ஆற்றல் நிலையத்திட்டம் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள பனசுரா சாகர் அணையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் துவங்கப்பட உள்ளது.
  • 500 கிலோவாட் மின் உற்பத்தி திறனுடைய இந்நிலையம் நிலத்தடி கேபிள் இணைப்புகள் வழியாக கேரளாவின் மாநில மின்சார வாரியத்தின் மின் விநியோக கட்டமைப்பில் (grid) இணைக்கப்படும்.
  • இம்மிதவை நிலையத்தின் சிறப்பம்சம் என்னவெனில் தண்ணீர் மட்ட மாற்றத்தோடு மிதவை நிலையம் சீராக அமைய நங்கூர அமைப்பு முறை கொண்டு இம்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு முன் கேரளாவினிலே காயம்குளம் எனும் இடத்தில் 100 கிலோவாட் மின் உற்பத்தி திறனுடைய மிதவை சோலார் நிலையத்தை NETRA (NTPC Energy Technology Research Alliance)  அமைப்பானது  அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்