மனிதர்கள் வாழாத மற்றும் சேறாக உள்ள வங்காள விரிகுடாவில் உள்ள தீவு, இராணுவ ஒடுக்கு முறைகள் காரணமாக மியான்மரை விட்டு வெளியேறிய 1,00,000 ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு இருப்பிடமாக மாறுகிறது.
பசன் சார் (பொருள் - மிதக்கும் தீவு) என்ற பெயரிடப்பட்டுள்ள வங்காள விரிகுடாவில் உள்ள இந்தத் தீவில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் தங்குவதற்கு வங்கதேச அரசால் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மிதக்கும் தீவு 20 ஆண்டுகளுக்கு முன்னர் வண்டல் படிவுகளினால் உருவான பகுதியாகும் (Emerged from the Silt). இது நிலப்பரப்பிலிருந்து 30 கி.மீ (21 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது.
ரோஹிங்கியர்களை தாழ்வான பகுதியில் அமைந்துள்ள இந்தத் தீவில் குடியேற்றுவது என்பது தற்காலிக ஏற்பாடுதான் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த தற்காலிக ஏற்பாடு வங்கதேசத்தின் காக்ஸ் பஸாரில் உள்ள முகாமில் நெரிசலைக் குறைக்க உதவும். காக் பஸார் முகாமில் ஆகஸ்ட் 2017லிருந்து, மியான்மரிலிருந்து வெளியேறி வந்த 7,00,000 ரோஹிங்கியர்கள் உள்ளனர்.