TNPSC Thervupettagam

மிதுன் - உணவு விலங்கு

September 24 , 2023 477 days 284 0
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது மிதுன் -கயால் தொடர்பான ஒரு முன்மொழிவை ஏற்றுக் கொண்டு அதனை உணவுப் பிராணியாக அறிவித்துள்ளது.
  • வடகிழக்குப் பகுதியின் பல்வேறு பழங்குடிச் சமூகங்களால் மிதுன் இறைச்சியானது உணவாக உட்கொள்ளப்படுகிறது.
  • ஆனால் FSSAI அமைப்பின் இந்த ஒப்புதல் மூலமாக, இந்த கால்நடை வளர்ப்பின் மூலம் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பயனடைய முடியும்.
  • மிதுன் அல்லது கயால் (போஸ் ஃப்ரண்டாலிஸ்) இந்தியக் காட்டெருது அல்லது காட்டெருமை இனத்தின் வழித் தோன்றலாகக் கருதப்படுகிறது.
  • இது வடகிழக்கு இந்தியா, வங்காளதேசம், வடக்கு மியான்மர் மற்றும் சீனாவின் யுனான் ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
  • இது 'மலைப்பகுதியின் கால்நடை' என்று அறியப்படுகிறது.
  • கயால், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகியவற்றின் மாநில விலங்கு ஆகும்.
  • மாட்டிறைச்சி மற்றும் எருமை இறைச்சி (10-12%) ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது மிதுன் இறைச்சியில் கணிசமாகக் குறைந்த அளவே (2-3%) கொழுப்பு உள்ளது.
  • இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனமாக பட்டியலிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்