TNPSC Thervupettagam

மித்ரா சக்தி - VI பயிற்சி

March 28 , 2019 2071 days 659 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO - Defence Research and Development Organisation) தயாரிக்கப்பட்ட செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணையான “A-SAT” ஆனது புவியின் தாழ் வட்டப் பாதையில் செயல்பாட்டில் உள்ள செயற்கைக் கோளை வெற்றிகரமாக அழித்து விட்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
  • அமெரிக்கா, இரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்த இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்ட நான்காவது நாடு இந்தியாவாகும்.
  • A-SAT ஆயுதங்களானது நகரும் செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணையை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகளாகும்.
  • உற்பத்தியாகும் எந்தவொரு கழிவுப் பொருட்களும் அழுகி அல்லது சிதைந்து ஒரு வாரத்திற்குள் புவியின் மீது விழுந்து விடும்.
  • A - SAT-ஐ மேம்படுத்திய மற்றும் பரிசோதனை செய்த முதலாவது நாடு அமெரிக்காவாகும். இதேபோன்ற ஒரு சோதனையை 2007 ஆம் ஆண்டில் சீனா நடத்தியது.

புவி தாழ் சுற்றுவட்டப்பாதை செயற்கைக் கோள்கள்

  • இது பூமியிலிருந்து 2000 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும் செயற்கைக் கோளாகும்.
  • பெரும்பாலான செயற்கைக் கோள்கள் இந்தப் பகுதியில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்