TNPSC Thervupettagam

மினமாட்டா உடன்படிக்கை – பின்னேற்பளிப்பு

February 10 , 2018 2352 days 739 0
  • மத்திய அமைச்சரவையானது மெர்க்குரி மீதான மினமாட்டா உடன்படிக்கைக்கு (Minamatta Convention) பின்னேற்பளிப்பதற்கான (ratification) முன்மொழிவிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
  • இந்தியா மினமாட்டா ஒப்பந்தத்தில் 2014-ஆம் ஆண்டு, செப்டம்பர் 30-ஆம் தேதி கையெழுத்திட்டது.
  • இந்த ஒப்பந்தமானது இந்தியாவிற்கு புதிய மின்சக்தி நிலையங்களிலிருந்து வெளிவரும் மெர்க்குரி உமிழ்வுகளை கட்டுப்படுத்த மற்றும் குறைக்க 5 வருட கால அவகாசத்தை வழங்கியுள்ளது.
  • அதேபோல் தற்போது பயன்பாட்டிலுள்ள ஆற்றல் நிலையங்களிலிருந்து வெளியேறும் மெர்க்குரி உமிழ்வுகளை கட்டுப்படுத்தி குறைத்திட 10 வருடம் கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

உடன்படிக்கையைப் பற்றி

  • மெர்க்குரி, மெர்க்குரி சேர்ம (Mercury compounds) பொருட்களின் வெளியேற்றம் மற்றும் மனித பயன்பாட்டினால் உண்டாகும் மெர்க்குரி உமிழ்வு (Anthropogenic emission) போன்றவற்றிலிருந்து சுற்றுப்புறத்தையும், மனித ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சர்வதேச உடன்படிக்கையே மினமாட்டா உடன்படிக்கையாகும்.
  • மினமாட்டா உடன்படிக்கையானது 2013-ஆம் ஆண்டு, ஜனவரி 19-ஆம் தேதி செயல்பாட்டிற்கு வந்தது.
  • மெர்க்குரி மாசு கலப்பினால் (Mercury contamination) 1950-ஆம் ஆண்டிலிருந்து மோசமான மெர்க்குரி நஞ்சேற்றத்தை (Mercury poisoning) சந்தித்து வரும் ஜப்பானிய நகரமான மினமாட்டா நகரின் பெயர் கொண்டு இந்த உடன்படிக்கைக்கு மினமாட்டா உடன்படிக்கை என பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்