மினமாட்டா (minamata Convention) உடன்படிக்கையின் உறுப்பு நாடுகளின் முதல் மாநாடு (CoP-1) அண்மையில் சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் நடைபெற்றது.
மெர்குரி அமிலத்தின் பாதக விளைவுகளில் இருந்து சுற்றுச் சூழலையும், மனித ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட உலக ஒப்பந்தமே மினமாட்டா உடன்படிக்கை ஆகும்.
50 உலக நாடுகள் இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டதன் மூலம் (ratified) 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த உடன்படிக்கை செயல்பாட்டிற்கு வந்தது.
இதன் முதல் மாநாட்டில் ”மாசு இல்லாத கிரகத்தை நோக்கி” (Towards a pollution free planet) என்ற அறிக்கை வெளியிடப்பட்டது.
உலக சுற்றுச் சூழல் வசதி (Globla Environment Facility – GEF) ஆனது மினமாட்டா உடன்படிக்கையின் நிதியியல் அமைப்பாகும் (Financial mechanism).
இந்தியா இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள போதிலும் இதுவரை பின்னேற்பளிக்கவில்லை. (ratification).