TNPSC Thervupettagam

மினிட்மேன் III - கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை

October 8 , 2019 1877 days 728 0
  • அமெரிக்க விமானப் படை மினிட்மேன் III எனப்படும் ஆளில்லாத கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • சோதனையில் பயன்படுத்தப்பட்ட அணுசக்தித் திறன் கொண்ட மினிட்மேன் III ஏவுகணையானது இலக்கைத் தாக்கி விட்டு மீண்டும் திரும்பி வரும் வகையில் பொருத்தப்பட்டிருந்தது.
  • இது சுமார் 4,200 மைல்கள் (6,750 கி.மீ) தொலைவு வரை பயணித்தது.
  • பலமுறை தன்னிச்சையாக இலக்கைத் தாக்கி விட்டு திரும்ப வரும் வகையில் (Multiple Independent Re-entry Vehicles - MIRV) பொருத்தப்பட்ட முதல் அமெரிக்க ஏவுகணை இதுவாகும்.
  • இந்த MIRVகள் தனித்த இலக்குகளை சென்று தாக்கக் கூடிய மூன்று வெவ்வேறு போர்க் கருவிகளைக் கொண்டு செல்ல ஏவுகணைகளுக்கு உதவுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்