கிரீட் தீவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மினோவான் நாகரீக மக்கள் தங்கள் சமயச் சடங்குகளுக்குப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகின்ற 4,000 ஆண்டுகள் பழமையான ஒரு கட்டமைப்பைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த வட்ட வடிவ அமைப்பு ஆனது வெண்கலக் காலத்தினைச் சேர்ந்த மினோவான் நாகரிகத்திற்கு முந்தையதாகக் கருதப்படுகிறது.
இது வெண்கலக் காலத்தில் கிரீட் தீவில் உருவாகி கி.மு. 3000 முதல் கி.மு. 1450 ஆம் ஆண்டு வரை நீடித்த நாகரிகமாகும்.
கடற்பயணம், வணிகம் மற்றும் கலை ஆகியவற்றில் மினோவான் சமூகத்தினர் மிகவும் மேம்பட்ட நிலையிலான சமூகமாக இருந்துள்ளனர்.
மினோஸ் என்ற புராண அரசரின் நினைவாக இந்த நாகரிகத்திற்கு இந்தப் பெயரிடப் பட்டது.