TNPSC Thervupettagam

மின் ஆளுகைக்கான தேசிய விருது 2023

August 31 , 2023 326 days 206 0
  • பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் SVAMITVA என்ற திட்டத்திற்கு, 2023 ஆம் ஆண்டு மின் ஆளுகைக்கான (தங்கம்) மதிப்பு மிக்க தேசிய விருது வழங்கப் பட்டுள்ளது.
  • இது 26வது தேசிய மின் ஆளுகை மாநாட்டில் (NCeG) குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்குவதற்கான வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் ஒரு பயன்பாடு என்பதன் கீழ் வழங்கப் படுகிறது.
  • SVAMITVA என்பது ‘ஒரு மேம்படுத்தப்பட்டத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி மேற் கொள்ளப் படும் கிராமங்கள் குறித்த கணக்கெடுப்பு மற்றும் கிராமப் பகுதிகளின் மீது வரைபடமாக்கல்’ என்பதன் சுருக்கமாகும்.
  • மின் ஆளுகைக்கான தேசிய மாநாடு (NCeG) என்பது, ‘விக்சித் பாரத், குடிமக்களுக்கு அதிகாரமளித்தல்’ என்ற கருத்துருவில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • தேசிய மின் ஆளுகை விருதுகள் பின்வரும் 5 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டன
    • எண்ணிம மாற்றத்திற்கான அரசாங்கச் செயல்முறையின் மறுசீரமைப்பு,
    • குடிமக்களை மையமாகக் கொண்டு வழங்கப்படும் சேவைகளில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு,
    • மின்-ஆளுகைக்கான மாவட்ட அளவிலான முன்னெடுப்பு,
    • குடிமக்களை மையமாகக் கொண்டு வழங்கப்படும் சேவைகள் குறித்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி மற்றும்
    • மின் ஆளுகையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் புத்தொழில் நிறுவனங்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்