TNPSC Thervupettagam

மின்-மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு

January 23 , 2018 2527 days 874 0
  • பொதுமக்களுக்கு திறன்பட்ட, தடையற்ற சுகாதார ஆரோக்கிய சேவைகளை வழங்குவதற்காக ஒடிஸா மாநில அரசானது ஒடிஸா மின்மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பை (Odisha e-Hospital Management Information System – OeHMIS) தொடங்கியுள்ளது.
  • நொய்டாவிலுள்ள அதிநவீன கணிமை மேம்பாட்டு மையத்தின் (Centre for development of Advanced Computing) தொழிற்நுட்ப ஒத்துழைப்புடன் ஓடிஸா மாநில அரசு இத்திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • இணைய வாயிலின் வழியே நோயாளிகளைப் பற்றிய தகவல்களும் அவர்களுடைய உடல் ஆரோக்கிய பிரச்சனைகளும் இந்த தகவல் அமைப்பில்  பதிவேற்றப்படும். பின் அவர்கள் தங்களுடைய கைபேசி பயன்பாட்டின் வழியாகவோ அல்லது வலைய இணையவாயிலின் வழியாகவோ தங்களது தனிப்பட்ட மின்னணு ஆரோக்கிய ஆவணங்களை (Health records) பார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்