வர்த்தகப் போட்டிகள் (competition), ஒழுங்குமுறைப்படுத்துதல் (regulation), தரவுகளின் பாதுகாப்பு, வரிவிதிப்பு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகளைக் களைய மின் வர்த்தகம் மீதான தேசிய கொள்கைக்கான கட்டமைப்பை (Framework for a national policy on e-commerce) இந்தியா வெளியிட உள்ளது.
மின் வர்த்தக துறைக்கான (e-commerce sector) கொள்கைகளின் வரையறைகளை (contours) இறுதி செய்ய ஓர் செயற் பணிப் படையை (task force) அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மின் வர்த்தகம் மீதான தேசிய கொள்கைக்கான கட்டமைப்பு மீதான சிந்தனைக் குழுவின் முதல் சந்திப்பின் போது செயற் பணிப்படை அமைப்பு அமைக்க முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இந்த முதல் சிந்தனைக் குழுவின் சந்திப்பிற்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை (Ministry of Commerce and Industry) அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமை தாங்கினார்.