TNPSC Thervupettagam

மின்-வழி இரசீதுகள்

April 7 , 2018 2425 days 843 0
  • சரக்கு மற்றும் சேவை வரிக் குழுவினுடைய (Goods and Service Tax council-GST Council) முந்தைய முடிவுகளின் படி மாநிலங்களுக்கிடையேயான பொருட்களின்  வர்த்தக இயக்கத்திற்கு (Inter-State movement of goods)   மின்-வழி இரசீது அமைப்பானது (e-way Bill System) நாடு முழுவதும் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  முதல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

  • சரக்கு மற்றும் சேவை வரியினுடைய மின்-வழி இரசீது வசதியானது முதல் முறையாக 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு ரூ.50,000 மதிப்பிலான  சரக்குகளை கொண்டு செல்லும் வணிகர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மின் வழி ரசீதுகளை உடன் கொண்டு செல்ல வேண்டும்.
  • சில தொழில்நுட்ப பிரச்சனைகளின் காரணமாக, GST குழுவானது மாநிலங்களுக்கிடையிலான  (inter-state) மின்-வழி ரசீதை   ஏப்ரல் ஒன்றாம் தேதி முதலும், மாநிலத்திற்குள்ளான மின்-வழி ரசீதை 2018 ஆம் ஆண்டின்  ஏப்ரல் 15 ஆம் தேதி  முதலும் அமலுக்குக் கொண்டுவர முடிவு செய்தது.
  • GST இணைய வாயிலில் (GST Portal) உற்பத்தி செய்யப்படும் ஓர் மின்னணு ஆவணமே (electric document) E-Way bill ஆகும். இது மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான ஓர் பொதுவான பகிரப்பட்ட தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பாகும் (Common and Shared information technology infrastructure).
  • இது பொருட்களின் வர்த்தக இயக்கத்திற்கான ஓர் சான்றாக செயல்படுகின்றது.
  • தேசிய தகவல் மையத்தால் (National Informatics Centre -NIC) மின்-வழி ரசீது அமைப்பு  வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்