பகுதியளவு மின்கலன் ஆற்றலின் மூலம் இயங்கக் கூடிய உலகின் முதலாவது பயணக் கப்பலானது, தனது முதலாவதுப் பயணத்தை வடக்கு நார்வேயிலிருந்து தொடங்க இருக்கின்றது.
இதற்கு 1903 ஆம் ஆண்டு முதல் 1906 ஆம் ஆண்டு வரை வடமேற்குப் பாதையில் பயணம் கொண்ட “ரோல்டு அமுண்டுசென்” என்ற நார்வேயைச் சேர்ந்த ஆய்வாளரின் நினைவாக இப்பெயர் இடப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் ட்ரோம்சோவிலிருந்து ஆர்க்டிக் வழியாக வடமேற்குப் பெருவழியின் மூலம் அலாஸ்காவை அடைந்து இறுதியாக அண்டார்டிகாவைச் சென்று அடையவிருக்கின்றது.