TNPSC Thervupettagam

மின்காந்த அயனி சைக்ளோட்ரான் அலைகள்

April 28 , 2023 450 days 209 0
  • இந்திய அண்டார்டிக் ஆய்வு நிலையமான மைத்ரியில், பிளாஸ்மா அலைகளின் ஒரு வடிவமான மின்காந்த அயனி சைக்ளோட்ரான் (EMIC) அலைகள் பெருமளவில் காணப் படுவதை அறிவியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
  • இந்த அலைகள் சேதம் விளைவிக்கும் (கொலையாளி) எலக்ட்ரான்களின் பொழிவில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன.
  • சேதம் விளைவிக்கும் எலக்ட்ரான்கள் என்பது பூமியின் கதிர்வீச்சு மண்டலத்தினை உருவாக்குகின்ற, ஒளியின் வேகத்திற்கு அருகிலான ஒரு பெரும் வேகத்தைக் கொண்ட எலக்ட்ரான்கள் ஆகும்.
  • கதிர்வீச்சு மண்டலங்களில் உள்ள தாழ்மட்டச் சுற்றுப்பாதையில் இயங்கும் செயற்கைக் கோள்களின் மீது இந்த ஆற்றல்மிக்க துகள்களின் தாக்கத்தைப் பற்றி புரிந்து கொள்ள இந்த ஆய்வு உதவும்.
  • மின்காந்த அயனி சைக்ளோட்ரான் (EMIC) என்பது பூமியின் காந்த மண்டலத்தில் காணப் படும் பிளாஸ்மா அலைகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்