ஜப்பான் நாடானது, நடுத்தர அளவிலான குழல் விட்டம் கொண்ட உலகின் முதல் கடல்சார் மின்காந்தப் பீரங்கி துப்பாக்கியை கடல்பரப்பு தளத்திலிருந்தபடி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
பீரங்கி துப்பாக்கி (ரெயில்கன்) என்பது மாக் 7 அல்லது ஒலியை விட ஏழு மடங்கு வேகத்தில் எறிகணைகளை எறியக் கூடிய ஒரு மின்காந்த ஆயுதமாகும்.
இதன் மூலம் கப்பல்கள், ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் போன்ற இலக்குகளைத் தாக்க முடியும்.