புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (RE) மூலங்கள் ஆனது, அனைத்து வகையான புதிய மின் உற்பத்தி திறனின் 26 GW என்ற மொத்தத் திறனில் சுமார் 71 சதவீதப் பங்கினை வழங்குகின்றன.
இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட திறனில் மாசுபடுத்தும் படிம எரிபொருளான – நிலக்கரி /லிக்னைட்டின் பங்கும் முதல் முறையாக 50 சதவீதத்திற்கும் (217.6 GW) கீழே குறைந்துள்ளது.
இது தற்போது மொத்த நிறுவப்பட்ட திறனில் 49.2 சதவீதமாக உள்ளது.