TNPSC Thervupettagam

மின்சார வாகன ஊக்குவிப்புத் திட்டம் 2024

March 23 , 2024 250 days 424 0
  • FAME-II திட்டம் மார்ச் 31 ஆம் தேதியன்று காலாவதியாகும் நிலையில், 2024 ஆம் ஆண்டு மின்சார வாகனப் பயன்பாட்டு ஊக்குவிப்புத் திட்டத்தினை (EMPS 2024) மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இத்திட்டமானது மின்சார இரு சக்கர வாகனங்கள் (e-2W) மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் (e-3W) பயன்பாட்டினை விரைவாக ஏற்றுக் கொள்வதை வெகுவாக ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • EMPS 2024 திட்டத்தின் கீழ் தகுதிபெறும் மின்சார வாகன வகைகளில், பதிவு செய்யப் பட்ட மின்சார வாடகை வாகன, மின்சார இழுவை வண்டிகள் மற்றும் L5 வகை வாகனங்கள் உள்ளிட்ட மின்சார இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் அடங்கும்.
  • இந்தத் திட்டம் முதன்மையாக வணிக நோக்கங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட மின்சார இருசக்கர வாகனங்கள் (e-2W) மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் (e-3W) ஆகியவற்றினை இலக்காகக் கொண்டுள்ளது.
  • தனிப்பட்ட அல்லது பெருநிறுவனத்திற்குச் சொந்தமான பதிவு செய்யப்பட்ட மின்சார இருசக்கர வாகனங்களுக்கும் இந்தத் திட்டத்தின் பலன்கள் நீட்டிக்கப்படுகின்றன.
  • மேம்பட்ட மின்கல அமைப்புகள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே ஊக்கத் தொகை வழங்கப்படும்.
  • FAME-II திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியங்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை விற்கப்படும் வாகனங்களுக்குப் பொருந்தும், அல்லது இத்திட்டத்திற்கான நிதி தீரும் வரை (இவற்றுள் எது முந்தையதோ) பொருந்தும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்