கனரகத் தொழில்துறை அமைச்சகம் ஆனது, 2024 ஆம் ஆண்டு மின்சார வாகனங்கள் ஊக்குவிப்பு திட்டத்தினை (EMPS 2024) மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
இதற்கு கூடுதலாக 278 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
EMPS ஆனது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று 500 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது.
மார்ச் மாதத்தில் FAME II திட்டம் காலாவதியானதைத் தொடர்ந்து, EMPS திட்டமானது ஆரம்பத்தில் நான்கு மாதங்களுக்கு மட்டுமே மேற்கொள்ளப்படுவதற்குத் திட்டமிடப் பட்டது.
இந்தத் திட்டம் ஆனது தற்போது 5 லட்சத்துக்கும் அதிகமான மின்சார இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும், சுமார் 61,000 மூன்று சக்கர மின்சார வாகன ஓட்டிகளுக்கும் மானிய உதவி வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.