TNPSC Thervupettagam

மின்சார வாகனம் (EV) கொள்கை 2024

March 19 , 2024 122 days 232 0
  • மத்திய அரசானது, புதிய மின்சார வாகன (EV) கொள்கையை அறிவித்துள்ளது.
  • இந்தியாவில் தனது உற்பத்திச் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கான டெஸ்லாவின் திட்டங்களுக்கு இது பெரும் ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்தப் புதிய கொள்கையின் ஒரு பகுதியாக, சில மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி வரிகளை அரசாங்கம் குறைக்கும்.
  • ஆர்வமுள்ள நிறுவனங்கள் குறைந்தபட்சம் 4150 கோடி ரூபாய் (500 மில்லியன் டாலர்) முதலீடு செய்ய வேண்டும்.
  • இருப்பினும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு இல்லை.
  • மின்சார வாகனங்களுக்கான (EVs) உள்நாட்டு உற்பத்தி மையங்களை நிறுவுவதற்கு அவற்றிற்கு மூன்று வருட கால அவகாசம் வழங்கப்படும்.
  • அவை அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்குள் 50 சதவீத உள்நாட்டு மதிப்பு கூட்டல் (DVA) நிலையை அடைய வேண்டும்.
  • உள்நாட்டு மதிப்பு கூட்டல் (DVA) என்பது உற்பத்தியில் பயன்படுத்தப்படும் உள்ளூர் மயமாக்கப் பட்ட கூறுகளின் சதவீதத்தைக் குறிக்கிறது.
  • நிறுவனங்கள் நிறுவப்பட்ட 3 ஆம் ஆண்டிற்குள் 25 சதவீதமும், 5ஆம் ஆண்டிற்குள் 50 சதவீதமும் உள்ளூர்மயமாக்கல் நிலையை அடைய வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்