TNPSC Thervupettagam

மின்சாரச் சந்தை பற்றிய அறிக்கை

July 30 , 2022 724 days 428 0
  • சர்வதேச எரிசக்தி முகமையானது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வெளியிடுகின்ற அறிக்கையின் 2022 ஆம் ஆண்டிற்கான மின் சந்தை பற்றிய அறிக்கையின் முதல் பதிப்பை வெளியிட்டது.
  • 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய மின்சாரத் தேவை ஆண்டிற்கு 6% அதிகரித்துள்ளது.
  • 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதிச் சிக்கலுக்குப் பிறகு சர்வதேச எரிசக்தி முகமை மூலம் பதிவு செய்யப்பட்ட ஆண்டிற்கு ஆண்டு ஏற்பட்ட செங்குத்தான உயர்வு இதுவே ஆகும்.
  • உலகளாவிய ஆற்றல் செறிவானது ஆண்டிற்கு 1.9% குறைந்துள்ளது.
  • 2050 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழியம் என்ற நிலையை அடைவதற்கான அடித்தளம் அமைப்பதற்குத் தேவையான அளவோடு ஒப்பிடும் போது இந்த வீழ்ச்சியானது அதன் பாதியளவாகவே உள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்துத் தயாரிக்கப்படும் மின் உற்பத்தியானது ஆண்டிற்கு 6% என்ற அளவு அதிகரித்துள்ளது.
  • நிலக்கரியிலிருந்துத் தயாரிக்கப்படும் மின் உற்பத்தியானது 9% அதிகரித்துள்ளது.
  • இந்த உயர்வானது, நிலக்கரித் தேவை அதிகரிப்பில் பாதிக்கும் அதிகமான தேவைகள் பதிவான சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் தான் அதிகம் பதிவாகியுள்ளது.
  • எரிவாயு மூலமான மின் உற்பத்தியானது 2% என்ற அளவில் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்