சர்வதேச எரிசக்தி முகமையானது (IEA), மிகச்சமீபத்தில் 2025 ஆம் ஆண்டு மின்சாரப் பயன்பாட்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
உலகளாவிய எரிசக்தி தேவையானது, 2024 ஆம் ஆண்டில் சுமார் 4.3% அதிகரித்துள்ளது மற்றும் 2027 ஆம் ஆண்டு வரையில் 4 சதவீதத்தினை ஒட்டி தொடர்ந்து அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சீனாவானது அமெரிக்கா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தை முந்தி மின்சாரத்தை மிக அதிகமாகப் பயன்படுத்தும் நாடாக உருவெடுத்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் பதிவான சுமார் 1% அதிகரிப்பைத் தொடர்ந்து, 2025 முதல் 2027 ஆம் ஆண்டு வரையில் மின்சார உற்பத்தியில் இருந்து வெளியாகும் ஒரு உலகளாவிய CO2 உமிழ்வு ஆனது நிலைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025-2027 ஆம் காலக் கட்டத்திலிருந்து, மின்சாரத் தேவையின் அதிகரிப்பில் சுமார் 95% தேவையினை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூர்த்தி செய்யும்.
இந்தியாவின் மின்சாரத் தேவையானது, 2024 ஆம் ஆண்டில் 5.8% அதிகரித்துள்ளது, மேலும் 2025-2027 ஆண்டு முதல் ஆண்டுதோறும் சராசரியாக 6.3% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அணுசக்தி திறன் ஆனது 2024 ஆம் ஆண்டில் 13% அதிகரித்துள்ளது.
2032 ஆம் ஆண்டில் இந்தியாவின் அனல் மின் உற்பத்தித் திறன் சுமார் 283 GW ஆக அதிகரிக்கும்.
2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் மின் உற்பத்தி மூலங்களின் பங்கில் 74% பங்குடன் நிலக்கரி முன்னிலையில் செலுத்துகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கு ஆனது, 21 சதவீதத்திலிருந்து (2024) 27% (2027) ஆக அதிகரிக்கும்.